தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது.

வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் ,ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா பத்திரம் குழந்தைகளின் டிரஸ்,வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள், பாத்திரங்கள், இரண்டு ஆடு உட்பட அனைத்தும் தீ விபத்தால் எரிந்து சேதமடைந்துள்ளது.

இவர்களை சந்தித்த அனைத்திந்திய இளைஞர் மன்ற தஞ்சை மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் விசாரித்து அவர்களுக்கு தேவையான ஆதார் கார்டு,ரேஷன் கார்டு, வீட்டு பத்திரம் மற்றும் புதிய வீடு கட்டித்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பெற்றுத் தருவதாகவும் மேலும் அனைத்திந்திய இளைஞர் சார்பாக அனைத்து உதவிகளும் செய்து தருவதாக ஆறுதல் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட காளிமுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியரும் ,தனியார் தொண்டு நிறுவனங்களும், தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் தங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை .யாராவது உதவி செய்தால் எங்களுக்கு பெரு உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.