அமைச்சர் எ.வ .வேலு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார்

திருவண்ணாமலை நவம்பர் 25

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் செங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம், மாணவ மாணவிகளின் பள்ளி வருகையை உறுதி செய்வதோடு, அவர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும் உதவுகிறது.அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 150 மேல்நிலைப்பள்ளி மற்றும் 17 அரசு உதவி பெறும் பள்ளி என மொத்தம் 167 பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 25731 பள்ளி மாணவ மாணவிகளுக்கும், 2022 – 2023 ஆம் ஆண்டில் 21489 பள்ளிமாணவமாணவிகளுக்கும்,2023 – 2024 ஆம் ஆண்டில் 21631 பள்ளி மாணவ மாணவிகளுக்கும், 2024 – 2025 ஆம் ஆண்டில் 20649 பள்ளி மாணவ மாணவிகளுக்கும், 2025 – 2026 ஆம் ஆண்டில் 20879 பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.