
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நுழையும் நுழைவாயில் எதிரே உள்ள கடைகள் ஏற்கனவே 3 அடி சாலையை நோக்கி கட்டிடம் கட்டி உள்ள நிலையில் மேலும் 5 அடி தூரம் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். அந்த இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத நிலையில் இருக்கிறது. அதே போன்று அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்படி இருக்கும் போது நகராட்சி தண்ணீர் லாரி உள்ளே சென்று எளிதில் வெளியே வர முடியாத சூழல் உள்ளது. இதனால் மற்ற வாகன ஓட்டிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை அப்புற படுத்த வேண்டும் என்று பலரின் கோரிக்கையாக உள்ளது.
