ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் மற்றும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது ஒகேனக்கல் சுற்றுலாத்தலமானது முற்றிலுமாக மூடப்படுவதை கண்டிக்கும் வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஒகேனக்கல் பேருந்து நிலையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத கணக்கில் மூடப்பட்டுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை முறையாக திறந்திட வேண்டும், நீர்வரத்து குறைந்தாலும் சுற்றுலாத்தலத்தை திறந்து வைப்பதை தள்ளி போடாதே, சுற்றுலா தளத்தை நம்பியுள்ள படகு, சமையல், விடுதிகள், சிறு குரு தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு ,சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளி மக்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் நிவாரணம் வழங்கிடு, அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சுற்றுலாத்தலத்தை மூடுவதும் திறப்பதும் இருப்பதை கைவிடு வெள்ளப்பெருக்கு காலங்களில் சுற்றுலாப் பணிகளை ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நிரந்தரமாக அனுப்பிட தீர்வு காண வேண்டும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு மாநில குழு குமார் மாவட்ட செயலாளர் சிசுபாலன்,மாதம்,விசுவநாதன் ,சக்திவேல், அன்பு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து ஊட்டமலை கிளைச் செயலாளர் வரதன் மற்றும் பொதுமக்கள் கட்சியினர் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.