கராத்தே போட்டிகளுக்கு மட்டும் இதுவரை எந்த வித சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அரசு கொண்டுவர வில்லை கராத்தே இந்தியா அமைப்பின் சேர்மன் சாய் ப்ரூஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.

பரத் கராத்தே அகாடமி சார்பாக கோவை சூலூர் பகுதியில், கராத்தே பயிற்சி முகாம் இரு நாட்கள் நடைபெற்றது. இதற்காற ஏற்பாடுகளை பரத் அகாடமியின் சீப் எகஸ்கியூட்டிவ் அதிகாரி, மற்றும் கராத்தே இந்தியா அமைப்பின் சேர்மன் சாய் ப்ரூஸ் செய்திருந்தார். இதனை தலைமை தாங்கி துவக்கி வைக்க, உலக கராத்தே சம்மேளனத்தின் முக்கிய பொருப்பாளரும், அகில இந்திய கராத்தே சங்க தலைவரும், தெற்கு ஆசிய தலைவருமான பரத் ஷர்மா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இங்கு நடைபெறும் இரண்டு நாட்கள் கராத்தே பயிற்சிகளை, மாணவ மாணவியர்களுக்கு வழங்க, ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து, வெலன்டினா, மற்றும் டெல்லியில் இருந்து பிரனை ஷர்மா ஆகியோர் வந்திருந்து, பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும், உலக அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வெற்ற வீரர் விராங்கணை ஆவர். மேலும் இந்த பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக, அறிவழகன், மோகன், முரளி, பாலமுருகன், சீதாலட்சுமி, ஜீவா ப்ரகதீஷ், உள்ளிட்டோர் செய்து இருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் மாணவ மாணவிகளுக்கு கட்டா, மற்றும் குமித்தே ஆகிய பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய 8
கராத்தே இந்தியா அமைப்பின் சேர்மன் சாய் ப்ரூஸ் கூறியதாவது..
கோவை மாவட்டத்தில் அகில இந்திய அளவில் செமினார் நடத்த திட்டமிடப்பட்டு இன்று இந்த பயிற்சி முகாம்கள் கோவை சூலூர் பகுதியில் நடைபெற்று வருகின்றது.
கட்டா, மற்றும் குமித்தே எனும் இரு பிரிவுகளில் இங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பட உள்ளது என்றார். இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்ற இரு முண்ணனி வீரர்கள் இங்கு வந்து அவர்களின் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதாக தெரிவித்தார். மேலும் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் மத்திய மாநில அரசுகள், கராத்தே போட்டிகளுக்காக எந்த வித திட்டத்தையும் இது வரை அமுல்படுத்த வில்லை, நாங்கள் அரசின் கதவை தட்டி கொண்டே தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் அரசு கராத்தே போட்டி களுக்கான திட்டத்திற்கு இன்னும் செவி சாய்க்க வில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.