கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் இல்ல சக்கராப்பள்ளி கோவிலில் திருடப்பட்ட சூரியன் சிலையை தமிழக அரசு மீட்டு தரக்கோரி
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.
பொன் .மாணிக்கவேல் கோரிக்கை…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோயில் வழிபாடு ஆன்மீகக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்..
திருச்சக்கராப்பள்ளி திருக்கோவில் பிரகாரத்தில் இருந்த ராஜராஜசோழன் காலத்து உலகத்தில் சூரியனுக்கு முதல் தளமாக திகழ்ந்த திருச்சக்கராபள்ளி கோவிலில் இருந்த பழமையான சூரியன் சிலை பாம்பே பகுதியில் உள்ளதாகவும் அதனை தமிழக அரசு மீட்டு மீட்டு தர கோரி கோரிக்கை வைத்தார்.
மேலும் சூரியன் சிலையை மீண்டும் கோவிலில் சப்தஸ்தான திருவிழாவை போல .விழா கொண்டாட பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருக்கயிலாய
சிவ பூதகண திருக்கூட்டம், ஆன்மீக அன்பர்கள்,பொதுமக்கள், கிராம மக்கள், கோவில் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
