கோவையில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கோவையில், மாநில அளவிலான கராத்தே போட்டிகள், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பயனீர் அறிவியல் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இதில் மேட்டுப்பாளையம் ஆலிவ் இஸ்லாமிய இண்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் கலந்து கோண்டு, வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் சையது முஹம்மது, கராத்தே மாஸ்டர் சிஹான் ஜெமிஷா கராத்தே பயிற்சியாளர் முக்தார் மற்றும் பள்ளி ஆசிரியர் ரஜியா சுல்தானா ஆகியோர் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.