கோவையில் மூன்று மாத குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை நரபலி கொடுக்க பட்டதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில், பிறந்து மூன்று மாதங்களான குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு உடலை வீசி சென்ற நிலையில் சடலத்தை மீட்ட காவல்துறையினர் குழந்தை நரபலி குடுக்க பட்டதாக என காவல்துறையினர் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை பீளமேடு, காளப்பட்டி- கோவில்பாளையம் செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் பிறந்து முன்று மாதங்களே ஆன குழந்தை இரண்டு கைகளும், இரண்டு கால்களுடன் சேர்ந்து இடுப்பு அளவிற்கு வெட்டப்பட்டு உடல்மட்டும் தனியாக சாலையில் வீசிச்சென்றுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார். கள்ள காதலில் பிறந்த குழந்தையா, அல்லது கோவில் அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் யாராவது குழந்தையை நரபலி கொடுத்துள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டத்தின் முன்பு நிறுத்தவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.