
நவம்பர் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக குறை மாத குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குறை பிரசவ குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இது குறித்த விழிப்புணர்வு ரிலீஸ் வீடியோக்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம், 24 மணி நேர வழிகாட்டுதலை பெற்றோர்களுக்கு வழங்கி, குழந்தை வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கமாக டிஜிட்டல் தளத்தின் வழியாக இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இதனை ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெளியிட்டனர் தொடர்ந்து இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது..
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் துறையில், குறை பிரசவத்தோடு பிறந்த குழந்தைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, குழந்தையின் வளர்ச்சிக்கும், சிகிச்சைக்கும், உதவி வருகின்றது, அவ்வாறு வளர்ந்து வரும் குழந்தைகள் ஒரு வயதை கடந்த பின் அவர்கள் ஒன்று கூடி, மகிழ்ச்சி அடையும் ஒரு விழிப்புணர்வு விழாவாக இந்த நாளை கொண்டாடி வருகின்றதாக தெரிவித்தார்

தற்போது வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் தளத்தின் நோக்கம் குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும், பெற்றோர்களுக்கு முழு நேர வழிகாட்டுதல் வழங்குவது மருத்துவமனையின் முக்கிய கடமையாகும், மருத்துவ நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த, விளக்க வீடியோக்கள் மூலம் பெற்றோர்கள் முழுமையாக பராமரிப்பு வழிகாட்டுதலை பெற முடியும் அதற்காக இவ்விழா நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ சிறப்பு காணொளி ஒளிபரப்பு மூலம் வெளிப்படுத்தப்பட்டு. அதை தொடர்ந்து, குழு நடனம், கேக் வெட்டுதல், புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
