கோவை, கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை அரசூர் பகுதியில் கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது…
கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, டெல்லி, ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, மற்றும் ஆஸ்திரேலியா சர்ச்சில் கல்வி நிறுவனம், ஆகியவை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு, பசுமை சார்ந்ததை ஊக்குவித்தல், பணியாளர் திறன்மேம்பாடு, மின்வர்த்தகம், மாற்றங்கள்மற்றும் ஆளுகை” என்ற தலைப்பில் நடைபெற்றது

. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச கருத்தரங்க மாநாட்டின் துவக்க விழா கல்லூரி வளாகத்தி்ல் நடைபெற்றது…
இதில் சிறப்பு விருந்தினர்களாக நேபாளத்தை சேர்ந்த எவரெஸ்ட் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி பிஷ்ணு ஹரி பாண்டே, அமேரிக்காவை சேர்ந்த
டாக்டர் பாலாஜி கிருஷ்ணன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்த மாநாட்டின் வாயிலாக, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று, ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் வருகையால் ஏற்படும், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” குறித்து கலந்துரையாடினர் மேலுல் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் வருகையால், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சியும் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.