கோவை கொடிசியா வளாகத்தில் பில்ட் இன்டெக் கண்காட்சி, பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக பில்டு இந்தக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தென்னிந்தியாவின் மாபெரும் கண்காட்சிகளில் ஒன்றாக
கோவை கொடிசியா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பில்டு இன்டெக் கண்காட்சி நடைபெற்று வருகிறது..
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி 9 ந்தேதி வரை பில்டு இண்டெக் 2026 கண்காட்சி நடைபெற உள்ளது.. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது…
இதில் பில்டு இண்டெக் 2026 கண்காட்சியின் தலைவர் ஞான வள்ளல் மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர் அப்பொழுது அவர் கூறியதாவது.. கட்டிடக் கலை, கட்டுமானம், பொறியியல், கட்டுமானப் பொருட்கள் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கான கண்காட்சியாக 15 வது பதிப்பாக நடைபெறும் பில்டு இண்டெக் கண்காட்சியில், கட்டுமானத் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் காட்சி படுத்த இருப்பதாக தெரிவித்தனர்…
குறிப்பாக இந்த கண்காட்சியில் நவீன கட்டுமானப் பொருட்கள், சேவைகள், மற்றும் கட்டுமான இயந்திர தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற உள்ளன.
கட்டுமானத் துறை சார்ந்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை உருவாக்கி கொள்வதற்கும் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி ஒரு மிகச் சிறந்த தளமாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்..
சுமார் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவில் மூன்று அரங்குகளில் நடைபெறும் இதில்,250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைய இருப்பதாகவும்,
நாடு முழுவதும் இருந்து சுமார் 40,000 பேர் வரை பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்..
மேலும் கட்டுமான துறையில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் துறை சார்ந்த எதிர் கால வளர்ச்சிகள் குறித்து சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் இருப்பதாகவும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
இந்த சந்திப்பின் போது பில்டு இண்டெக் துணை தலைவர் பாபு,கொடிசியா செயலாளர் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.