கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரியில் நிறுவனர்கள் தினம் கொண்டாட்ட பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ பங்கேற்ப்பு

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் தினவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ பங்கேற்று மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி வரவேற்புரையாற்றினார். தலைமை விருந்தினராக ஈரோடு யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனதின் நிர்வாக இயக்குநர் தேவராஜன் சின்னுசாமி ஜிஆர்ஜி நினைவு பேருரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ரானே லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ,கௌரி கைலாசம், தொழில் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய முன்மாதிரியான தலைமைத்துவம், மற்றும் மாற்றத்திற்கான பங்களிப்பை பாராட்டி அறக்கட்டளை சார்பில், 2026 ஆம் ஆண்டிற்கான சந்திரகாந்தி கேட்டலிஸ்ட் லீடர் எனும் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில் முனைவோர் துறையில் ஆற்றிய முன்னோடி பங்களிப்பிற்காக மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் முருகவேல் ஜானகி ராமனுக்கு, 2026 ஆம் ஆண்டிற்கான ஜி ஆர் ஜி ட்ரெயிபிளேசர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண்களின் தலைமை துவத்திற்கான சந்திரகாந்தி ஃபெலோஷிப் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முறையான வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டின் கீழ் எதிர்கால பெண் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாக அமைந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹீரோ பின் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த கடன் ஒப்புதல் அதிகாரி ரமா மீனாட்சி, இந்திய அரசின் வருமான வரித்துறை துணை ஆணையர் லீனா அன்டோனென்ட் மரியா, மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வணிக மதிப்பீடு காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை துணைத் தலைவர் புவனேஸ்வரி முரளி, ஜி ஆர் ஜி கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.