
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு சிறுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டி குவிக்கப்படும் மரங்கள் வனங்களை அளிப்பவர்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வெட்டப்படும் மரங்களுக்கு குறியீடு கிடையாது வெட்டப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் வைக்கப்படுவது கிடையாது.
மலையை அழிக்கும் நபர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதால் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வணிக ரீதியான கட்டிடங்கள் கட்டப்பட்டு வனங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக வனத்துறை அதிகாரிகளும் தமிழக அரசும் தமிழக உணவுத்துறை அமைச்சரும் தலையிட்டு சிறு மலையை காப்பாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை
தொடர்ந்து மேற்கு மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து வரும் உணவுத்துறை அமைச்சர் சிறுமலையில் வனங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என? அப்பகுதி பொதுமக்கள் முதல் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
