
. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு செயற்பொறியார் பாபு, உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன் மற்றும் பிறதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், நிறைவேறிய தீர்மானங்கள், அடிப்படை வசதிகள் குறித்து, பேசினர்.வார்டு உதவி பொறியாளர்கள், கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து, 6 ம் தேதிக்கு முன்னதாக பொருள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும். அப்போது தான், 10 ம் தேதிக்குள் கூட்டம் நடத்த முடியும். மழைக்கு முன்பாக, தண்ணீர் தேங்கும் இடங்கள், மழைநீர் வடிகால் குறித்து, கணக்கெடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதே போல், மின் வாரியம், மின்பெட்டிகளை மாற்றித்தர வேண்டும். மின் கணக்கீடு தாமதமாவதால், நுகர்வோர் சலுகைகள் பெற முடியவில்லை. எனவே, குறிப்பிட்ட தேதிக்குள், கணக்கெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
