தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியை 79 ஆவது சுதந்திர நாளில் நடத்தி வரும் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க தொகையாக 2000 ,1000, 500 என வழங்கப்பட்டது மேலும் வருகை பதிவேட்டில் 100% வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 50,000 மதிப்புள்ள பரிசு பொருட்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார்கள்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது மேலும் இப்பள்ளியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .