
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கல்லூரியின் சாலை பாதுகாப்பு குழு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு ஆகியவை இணைந்து நடத்தியது இதில் சிறப்பு விருந்தினராக கந்திலி காவல் உதவி ஆய்வாளர் திரு ரூபன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும் போதைப்பொருளின் தீமை பற்றியும் எடுத்துரைத்தார் பிறகு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்களின் பேரணி கல்லூரியில் துவங்கி கந்திலி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் போதை பொருள் எதிர்த்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய பதவிகளை கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர் இதனால் அப்பகுதி மக்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை போதைப்பொருள் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரூபா மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் நரசிம்மன், முனைவர் பல்லவன், முனைவர் பிரியா முனைவர் ரோஜாபாய், முனைவர் மகாலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
