
திருவண்ணாமலை பிப்.04- திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 2025 கிறிஸ்துமஸ் வடநாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் கடந்த மாதம் 4ந் தேதி ஒடிசா மாநிலம் பர்ஜங்கில் 40 பேர் கொண்ட பர்ஜங்தல் கும்பல் போதகர் பிபின் பிகாரி நாயக்கை தேவாலயத்திலிருந்து கட்டி இழுத்துச்சென்று கோவிலுக்குள் தள்ளி மாட்டு சாணத்தை வாயில் திணித்து ஜெய்ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி கொடுமைப்படுத்தியதை கண்டித்தும் தி.மலை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேராயர் சாம்.எஸ்.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிகளை அருட்பணி தமிழ் சுவை எஸ்.ராஜசேகரன் தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.சசில்குமார், ஜாய் பிரெடெரிக், ஏ.எஸ்.ஜான் பீட்டர், ஆர்.ஆனந்தஜீவன் ஏஎல்சி ஜீவரத்தினம் எபிசேனர் இறை அமிர்தம் ஜோசப் சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆற்காடுலுத்ரன் திருச்சபை பேராயர் டி.பீட்டர்பால் தாமஸ் உலகமாதா பேராலயம் மறைக்கோட்ட முதன்மை குரு எஸ்.லூர்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் சீனி.கார்த்திகேயன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.குணசேகரன் விசிக மாநில செயலாளர் பு.செல்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வீரபத்திரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.ஆர்.நாசர்உசேன் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.கலிமுல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.சரவணன் கண்டன பேருரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஎல்சி துணை தலைவர் ஜெ.மனோவா செயலாளர் வி.ஜெயராஜ் மத்திய நிர்வாகி ஸ்பர்ஜன் மர்ஃபி அருட்தந்தை ஞானஜோதி வந்தவாசி ஜான் அருள்ராஜ் போதகர் ஜாய் பிரடெரிக் தலைமை போதகர் நெல்சன் ஞானக்குமார் டேனியல் குமார் சாம் அரிதாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் அமுதன் எஸ்.ஜெயசீலன் ஜான் ஜெபசிங் தனராஜ் அசோக்குமார் யோசுவா தாமஸ் சத்தியநாதன் ராபின்சன் ஆனந்தராஜ் ஜேம்ஸ், லட்சுமண் லாசரஸ் சாமுவேல் மற்றும் கிறிஸ்துவ திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மை அமைப்புகளின் நிர்வாகிகள் கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆயர். மனோவா அவர்கள் நன்றி கூறினார்.
