தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகான வேண்டும்! தஞ்சையில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது,பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பருப்பு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த பொங்கலின் போது பொங்கல் தொகுப்பு பரிசு வழங்குவதில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் வழங்கிய நிறுவனங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழக அரசின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது.இந்நிறுவனங்களுக்கு மீண்டும் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதியை வழங்கியிருப்பது கட்டணத்துக்குரியது. ஊழல் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும், இனி ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடின்றி தொடர்ந்து கிடைக்க தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். தஞ்சை மேற்கு மாவட்ட மு.செயலாளர் அ.ரெ.முகிலன்,மாநகர மு.செயலாளர் தஞ்சை தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைவர் அரங்க.குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகிகள் தை.சேகர்,சாக்கோட்டை ராஜா,வெண்ணிலா, கு.ரோஸ்லின், பொன்.குருமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் ரமிளா தமிழ்மாறன்,குடந்தை மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட செயலாளர் செருகை சுரேசு,மாவட்ட பொறுப்பாளர்கள் சுரை.திருமேனி, கே.ஆர்.சந்திரன், ஆட்டோ நகர் அலெக்ஸ்,மு.முரளி,சி.முருகராஜ்,கோவிந்தசாமி, பாலச்சந்திரன்,ரியாஸ்,ஸ்ரீராம், அமல் நாயகன், மயில் வாகனன்,திலீப்,அன்பரசன், பரணி அரசன், வேளாங்கண்ணி,நேசக்குமார்,விக்னேஷ்,சூர்யா,கிஷோர், புஷ்பமணி ராமன்,கயலூர் மகேந்திரன் உள்ளிட்ட பல நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தஞ்சை மைய மாவட்ட செயலாளர் எஸ் .ஏ.பி.சேவியர் நன்றி கூறினார்.