
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் வாணியர் செட்டியார் சமுதாய மக்கள், சர்வே எண் 83/B-ல் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக செக்கு ஆடி அதிலிருந்து எண்ணெய் எடுத்து அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் வடிவாம்பிகை திருக்கோவில்களின் கர்ப்ப கிரகத்தில் விளக்கேற்றி, அங்கு இருள் நீக்கி மூலவர்களின் தரிசனம் பெற்று பக்தர்களுக்கு அருள் ஆசி பெற செக்காடி இறைவனுக்கு சேவை செய்து வந்தனர்.
செக்கு தொழில் நலிவடைந்து வந்த நிலையிலும் இந்த இடம் பராமரிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த இடத்தை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினர் முற்படுவதாக தெரிவித்து இந்த இடத்தை தங்கள் சமூகத்தின் பெயரிலேயே பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் பெருமாள் அவர்களிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில், சிமெண்ட் அட்டையினால் கூரை கொட்டகை அமைத்து பயன்படுத்தி வருவதை அப்புறப்படுத்த தீர்த்தமலை கிராம நிர்வாக அலுவலர் தங்களுக்கு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், எங்கள் தரப்பை எடுத்துக்கூறியும் கூரைக் கொட்டைகையை பிரிக்காமல் பாதுகாத்து வரும் நிலையில், இதை சாதகமாக எடுத்துக்கொண்டு வேறு சமூகத்தினருக்கும் எங்களுக்கும் எங்களது உடமைக்கும் எந்த நேரத்தில் ஆபத்தை விளைவிக்கும் சூழ்நிலையும் இருந்து வருகிறது எனவும், ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் அவர்களது சமூகத்தின் பெயரில் பட்டார்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் வருவாய்த் துறையினர் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் பெயருக்கு பட்டா வழங்க முற்படுவதை தவிர்த்து விட்டு எங்கள் வானிய செட்டியார் சமூகத்தின் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும் என வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
