
திமுக துணைப்பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழியிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், பதிவாளருக்கு வாரம் 50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதால் நான் லஞ்சம் வாங்கதான் செய்வேன் நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என பெண் சார்பதிவாளர் வெளிப்படையாக கூறுவதாக பாமகவினர் குற்றச்சாட்டு
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையில் செக்காணுாரணி பெண் சார்பதிவாளரை கைது செய்ய கோரி பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார், ராஜாராம், குருபாலமுருகன், பாக்கியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு செக்கானூரணி சார்பதிவாளர் உமாதேவிக்கு எதிராகவும், உமாதேவியை கைது செய்ய கோரியும், பத்திரப்பதிவுத்துறை பதிவாளருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.,
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் செக்காணுாரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் அங்கீகாரம் இல்லாத பத்திர பதிவுகளுக்கு செண்டுக்கு 10 ஆயிரம் வீதம் லஞ்சமும், பட்டா மாறுதல் இல்லாத பதிவுகளுக்கு சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப ரூபாய் 20 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை பேரம் பேசி லஞ்சமும், வீட்டு அடமான கடன் வாங்கும் மக்களிடம் தொகைக்கு ஏற்ப லஞ்சம் பெற தனியாக அலுவலகம் நடத்திவரும் சார்பதிவாளர் உமாதேவியை கைது செய்ய கோரியும்
பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றுவரும் சார்பதிவாளர் உமாதேவி மீது பொதுமக்கள் பல்வேறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பத்திரப்பதிவுத்துறையை கண்டித்தும் நடைபெற்றது
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துசென்றனர்
