பாணி முனியப்பன் கோவில் திருவிழாபரிசல் ஓட்டிகள் கெடா வெட்டி விருந்துபென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 400 மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் பரிசல் தொழில் செய்து வருகின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்வதும் வழக்கம் . கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பாணி முனியப்பன் சாமிக்கு ஒகேனக்கல் பரிசல் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வருடத்திற்கு ஒருமுறை வருட வருடம் பாணி முனியப்பன் கோவிலுக்கு பூஜை செய்து கிடாய் வெட்டி கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று பாணி முனியப்பன் சாமிக்கு பூஜை சிறப்பு அலங்காரம் செய்தும் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பூஜை செய்து பரிசல் ஓட்டிகள் குடும்பங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பரிசல் ஓட்டிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்