
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி கோவை துடியலூர் திமுக 2 மற்றும் 2 அ வட்ட கழகங்கள் சார்பில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் திமுக 2 மற்றும் 2 அ வட்ட கழகங்கள் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது
துடியலூர் திமுக மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு பகுதி கழக பொறுப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். வட்டக் கழக அவைத் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு அனைவரும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யதனர்.
இரண்டாவது வட்டக் கழக பொறுப்பாளர் தமிழ்நிதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனுசரிப்பு நிகழ்வில் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, அருக்காணி, சி டி சி சுப்பிரமணியன், வெற்றிச்செல்வன், ராமசாமி, பன்னீர், தமிழ்ச்செல்வி, வாசு, கோமதி, செல்வி, தனபாக்கியம், அயூப்கான், ரவி, பாலுசாமி, டி எஸ் ராமசாமி, சீனிவாசன், பழனிச்சாமி, செல்வி சுப்பிரமணியன், லட்சுமி, வேணுகோபால், சி டி சி ஆனந்தன், கிருஷ்ணசாமி, செல்வராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
