
கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் முன்பு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இக்கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் ரிப்பன் வெட்டி பெயர்பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் புஸ்பாணந்தம் கூறியதாவது.. வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று, சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு, கவுண்டம்பாளையம் தொகுதியில் நிற்க உள்ளதாகவும், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதாகவும் கூறினார். மேலும் மக்களுக்கு சேவை செய்ய மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இந்த தேர்தலில் களமிறங்க உள்ளதாக கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர், மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதல் வாரத்தில் மட்டும் பொதுமக்களை சந்திப்பதாகவும், மற்ற மூன்று வாரங்களும் ஆட்சியர் மக்களை சந்திப்பதில்லை எனவே, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிகம முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில், கணுவாய் ராதாகிருஷ்ணன், வெங்கட், சுரேஷ் குமார் அன்னூர் அருள், வைத்தியர் பாலகிருஷ்ணன், போலிஸ் சுரேஷ், ரங்கப்பன், பைனான்ஸியர் பெருமாள் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, ஜெபா மோகன் ராஜா, வர்ஷா, வர்ஷினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
