மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் சாலை ஓரம் உள்ள புளிய மரங்களை முறையின்றி வெட்டப்படுவதாக மக்களை அச்சுறுத்த வகையில் இருப்பதாக கூறி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் இன்று
ஊத்தங்கரை -புலியூர் சாலை விரிவாக்க பணிக்காக முறைகேடாக வெட்டப்படும் புளிய மரங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மரங்கரை வெட்டப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இல்லாமல் சாலையில் பயணிப்பவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.சந்தை மதிப்பு உள்ள மரங்களை மிக குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட வில்லை கார்பரேட் நிறுவனங்கள் பயன்பெற 30 முதல் 50 ஆண்டுகள் பயன்பாட்டில்
உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் இயற்கை சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி மரங்கள் வெட்டப்படுவதும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் மரங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுற்றுச்சூழல் அணி சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்