யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 46 வது கோயம்புத்தூர் சகோதயா

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 2025 – 2026 ம் ஆண்டிற்கான 12 வயதிற்குட்பட்ட 14 வயதுக்குட்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட சி பி எஸ் சி பள்ளி மாணவர்களுக்கான, 46 வது கோயம்புத்தூர் சகோதயா பள்ளிக்களுக்கு இடையேயான கோ கோ போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 56 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

2025 – 2026 ம் ஆண்டிற்கான 12 வயதிற்குட்பட்ட 14 வயதுக்குட்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட சி பி எஸ் சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான, கோயம்புத்தூர் 46 வது சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கோ கோ போட்டிகள் பெரியநாயக்கன்பாளையம் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 56 அணிகள் பதிவு செய்திருந்தனர். போட்டிகளை யுனைடெட் பப்ளிக் பள்ளியின் செயலர் முனைவர் மைதிலி சண்முகம் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும் கை குழுக்கி வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும் தொடங்கி வைத்தார்.

முதல் நாள் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட 16 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவினர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எம் டி என் ஃபியூச்சர் பள்ளி முதலிடமும், பிருந்தாவன் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடமும், ஏ கே ஆர் பள்ளி மூன்றாம் இடமும், உடுமலை யுனைடெட் பப்ளிக் பள்ளி நான்காம் இடமும் பெற்றனர்.

அதேபோல் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எம் டி என் பியூச்சர் பள்ளி முதலிடமும், வித்யா விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாம் இடமும், நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயா பள்ளி மூன்றாம் இடமும், பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளி நான்காம் இடமும் பெற்றனர்.

மேலும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எம் டி என் ஃபியூச்சர் பள்ளி முதலிடமும், சிந்தி இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாம் இடமும், டூப்ஸ் பப்ளிக் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றனர்.

இரண்டாம் நாள் போட்டிகளில் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எம் டி எம் ஃபியூச்சர் பள்ளி முதலிடமும், பிருந்தாவன் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடமும், கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி மூன்றாம் இடமும், ஜி ஆர் டி பப்ளிக் பள்ளி நான்காம் இடமும் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளின் முடிவுகளை அறிவித்தார். நிர்வாக இயக்குநர் முனைவர் பி சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

வெற்றிப் பெற்ற பள்ளிகளுக்கு தி யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், நிர்வாக இயக்குநர் முனைவர் பி சிவக்குமார், தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி, துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா ஆகியோர் மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.மேலும் போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும், போட்டிகள் நடைபெற உறுதுணையாக இருந்த யுனைடெட் பப்ளிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பூபதி, நரேஷ் மற்றும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி ஆசிரியர்கள் நவீன்குமார், சுரேஷ், பிரதீப், பசுவதேவன், சிந்துஜா, பிரியதர்சினி உள்ளிட்டவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.