ரெப்கோ நுண்கடன் வங்கியின் துடியலூர் கிளையின்புதிய வளாக திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றதுமகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.50 லட்சம் நுண்கடன்

ரெப்கோ நுண்கடன் நிறுவனம் துடியலூர் கிளை புதிய வளாக திறப்பு விழா மேட்டுப்பளையம் சாலை வடமதுரை பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன இயக்குனர் மற்றும் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன தலைவரும், ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் இயக்குநருமாகிய தங்கராஜு ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், பெயர் பலகையை திறந்து வைத்தும் மகளிர் சுய உதவிக் குழு மகளிர்க்கு 50 லட்சம் ரூபாய் நுண்கடன்களை வழங்கினர்.

கோவை துடியலூரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ரெப்கோ நுண்கடன் நிறுவன துடியலூர் கிளை தற்போது கோவை மேட்டுப்பளையம் சாலை வடமதுரை பகுதியில் புதிய வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்வில் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன இயக்குனர் மற்றும் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன தலைவரும், ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் இயக்குநருமாகிய தங்கராஜு ஆகியோர் ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், பெயர்பலகையை திறந்தும் வைத்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெப்கோ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பாலமுருகன் திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கடாசலம் மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் இயக்குநர் இன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன இயக்குனர் மற்றும் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன தலைவரும், ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் இயக்குநருமாகிய தங்கராஜு ஆகியோர் பேசும்போது

ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் நுண்கடன் பற்றிய பயிற்சி முகாமானது பெண்களுக்கு நிதி மேலாண்மை குறித்து சிறந்த புரிதலை வழங்கி அவர்களை மேலும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற உதவுவதாகவும், வேறு எந்த நிதி நிறுவனத்திலும் இல்லாத வகையில் பயிற்சியின் போது மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து துடியலூர் கிளையில் நுண்கடன் விண்ணப்பித்த மகளிர் சுய உதவிக் குழு மகளிர்க்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நுண்கடன்களுக்கான ஆணைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிளை மேலாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் சீனிவாசன் மற்றும் துணை பொது மேலாளர் விமல் ஆகியோருடன் இணைந்து மண்டல மேலாளர் ஈஸ்வரன் கோட்ட மேலாளர்கள் முத்து குமார், சுரேஷ்குமார், முதன்மை மேலாளர் பழனி ஆறுமுகம், துணை மேலாளர்கள் நரேஷ் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். விழா இறுதியில் கிளை மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக இத்திறப்புவிழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு துடியலூர் கிளை சார்பில் பேண்டு வாத்தியம் முழங்க இருபுறமும் மகளி சுய உதவிக்குழுவினர் கைகளில் மலர்கள் ஏந்தியும், சால்வை மற்றும் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கினர். மேலும் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.