வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி பரபரப்பு காட்சி வைரல்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம் ஓய்வெடுத்த கரடி காலையில் சுமார் 7 மணியளவில் அங்குள்ள தேயிலை ஆலை பகுதியில் திடீரென புகுந்து தொழிலாளியை தாக்க முயன்ற கரடியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளி கையில் விரித்து வைத்திருந்த குடையை வைத்து மறைத்து சத்தம் போட்டு அலறியதால் கரடி மிரண்டு ஓடியுள்ளது இதனால் எந்தவிதமான காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக அந்த தொழிலாளி உயிர் தப்பியுள்ளார் இக்காட்சி அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்