
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. ஷாமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து நிர்வாகிகளிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
அரசியல் நிலைப்பாடு , “வரும் சட்டமன்றத் தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும். என்று மாவட்ட தலைவர் ஆறுமுகம் எடுத்துரைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அன்புமணி தம்பிகள் படை மாநில செயலாளர் அன்பழகன், இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் வன்னிய பெருமாள், மாவட்ட செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் கள் நாம் அனைவரும் இப்போதிலிருந்தே தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.ஒன்றிய, கிளை மற்றும் வார்டு நிலையிலான கட்சி நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தங்களது ஆலோசனைகளையும், களப்பணி தொடர்பான கருத்துகளையும், தொகுதி வாரியான அணுகுமுறைகளையும் முன்வைத்தனர்.பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, கிராமங்கள் தோறும் மக்களைச் சந்தித்து கட்சித் திட்டங்களை எடுத்துரைப்பது, இளைஞர்கள் மற்றும் மகளிரை அதிகளவில் கட்சியில் சேர்ப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்பது என உறுதி ஏற்கப்பட்டது. இதில் மாவட்டத் துணைத் தலைவர் பெரியண்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் முனியப்பன்,ஒன்றிய தலைவர் மாதேஷ், கவுன்சிலர் தமிழ்சங்கர், பில்லா மாதேஷ், பசுமைத்தாயகம் மணி, ஆசிரியர் கூட்டணி மணி, சரவணன், செந்தில்குமார், மாது, திருப்பதி, வேடியப்பன், ராஜேஷ், செந்தில்குமார், சந்திரசேகர், குமார், கிருபாகரன், வேடி, செந்தில், முனியப்பன், வசந்தகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், அணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் மூலம் தேர்தல் களத்திற்கான ஆயத்தப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது தெளிவாகிறது.இதைதொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு பசுமைத் தாயகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இறுதியில் மாவட்ட துணை செயலாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.
