
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடந்தது பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராஜ் முன்னிலை வகித்தார் பள்ளி ஆசிரியை அன்பரசி அனைவரையும் வரவேற்று பேசினார் செந்துறை வட்டார கல்வி அலுவலர் வேல்முருகன் செந்துறை ஞானாம்பாள் பேங்க் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிவமூர்த்தி ஆற்றி வரும் கல்வி சேவைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பேசினார்கள் தலைமை ஆசிரியருக்கு தமிழக அரசால் சமீபத்தில் வழங்கப்பட்ட விருதும் ரூபாய் 10 லட்சம் வழங்கி அரசு பள்ளி வளர்ச்சியை ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி ஏர்புரையாற்றினார் ஆசிரியர் வேல்முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார் பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைமையாசிரியர் சிவமூர்த்திக்கு சால்வைகள் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது
