அலென் கேரியர் இன்ஸ்ட்டியூட் சார்பாக மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியுடன்சோபன் என நடைபெற்ற விழாவில் பொறியியல், மருத்துவம் மற்றும் ஒலிம்பியாட் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.

அலென் கரியர் பயிற்சி நிறுவனம் மருத்துவ நிழைவு தேர்வான நீட் மற்றும் பொறியியல் துறை தேர்வான ஜே.இ.இ.உள்ளிட்ட முதன்மை தேர்வுகளை மாணவர்கள் எதிர் கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறது..
குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளான ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆலன் கோயம்புத்தூர் ஒரு சிறந்த வழிகாட்டுதல் தளத்தை வழங்கி வருகிறது…
இந்நிலையில் அலென் கோவை கிளை சார்பாக தனது வருடாந்திர ஆண்டு விழாவான சோபன் எனும் மாணவர்களுக்கான பாராட்டு விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக சாதித்து முன்னணி தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற கோயம்புத்தூரின் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவாக நடைபெற்ற இதில்,
சிறப்பு விருந்தினர்களாக சக்தி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் தீபன் தங்கவேலு, பிருந்தாவன் வித்யாலயாவின் தாளாளர் மற்றும் முதல்வர் வனிதா திருமூர்த்தி, கோவை வித்யாஷ்ரமத்தின் தாளாளர் மற்றும் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.பி. தேன்மொழி,ஏ.வி.ஜி. பள்ளியின் முதல்வர் சிவக்கொழுந்து, தி என்.ஜி.பி. பள்ளியின் முதல்வர் பிரீதா, தி என்.ஜி.பி. பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நடராஜ், பிருந்தாவன் பப்ளிக் பள்ளியின் துணை முதல்வர் முத்துக்குமாரி, மவுண்ட் லிட்டெரா ஜீ பள்ளியின் முதல்வர் வெங்கட் மற்றும் அத்வைத் தாட் அகாடமி ஒருங்கிணைப்பாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
விழாவில் பொறியியல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்வதற்கான தேர்வுகளில் அகில இந்திய அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் மருத்துவ துறை உட்பட இந்தியாவின் முன்னனி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை அனுமதி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக இந்திய வருவாய் சேவையைச் சேர்ந்த வருமான வரி ஆணையர் டாக்டர் ஏ. ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு அலென் பயிற்சி மையத்தின் சேவையை பாராட்டி சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்..
நிகழ்ச்சியில்,
அலேன் தெற்கு மையங்களின் துணைத் தலைவர் மற்றும் வேதியியல் துறை ஆசிரியரான மகேஷ் யாதவ்,
அலேன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மையங்களின் கல்வி தலைவர் மற்றும் கணித துறை ஆசிரியரான சந்தோஷ் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்…