
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43.வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மதுரை மண்டல ஆலோசனைக்கூட்டம் விளக்குத்தூண் பகுதியில் உள்ள மதுரை நாடார் மஹாஜன சங்க மேன்சனில் நடைபெற்றது.
மதுரை மண்டல தலைவர்
மைக்கேல்ராஜ், தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் தலைவர் முத்துகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார்.
மாநிலச்செயலாளர் ,
குட்டி (எ) அந்தோணிராஜ்,
மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ்
மாநில துணைத்தலைவர்
சூசை அந்தோணி,
மகளிர் அணி தலைவி
பாக்கியலெட்சுமி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டது,
தொடர்ந்து
சிறுவணிகர்களின் வாழ்வதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதால் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கவும் T-மார்ட் வியாபரத்திற்கும் தடை விதிக்க வேண்டும் ,
சிறு வியாபாரிகளுக்கு எந்தவித வரியும் வசூலிக்க கூடாது என்று மத்திய, மாநில அரசை கேட்டுக்கொள்கிறோம்.
சிறு, குறு தொழில் செய்யும் வணிகர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும்
சிறு, குறு வியாபாரிகளுக்கு இலவச மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து இழப்பீடு வழங்க வேண்டும் .
இரண்டு மாதம் மின் கட்டணத்தை தவிர்த்து மாதந்தோரும் மின்கணக்கீடு அளவிடு செய்து கொடுக்குமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பாக நடைபெறும் 43வது மாநில மாநாட்டிக்கு குறைந்தது 100 வாகனங்களின் செல்வது என்று ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
