
பென்னாகரம் தாலுக்கா, ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
உணவுபாதுகாப்பு அலுவலர் ஆய்வின் போது விதிமுறைகள் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமேற்றிகள் அதிகம் சேர்க்கப்பட்ட காரவகைகள் மற்றும் தரம் குறைந்த நாள்பட்ட கப்கேக்குகள், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்கள், சில்லி சிக்கன் பார்வைக்கும், விநியோகம் செய்தது என சுமார் 10 கிலோ அளவில் ஒரு சில உணவகங்கள் மற்றும் பேக்கரி கடைகளில் இருந்து கடைகளில் இருந்து பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்கள் மற்றும் ஒரு உணவகத்தில் ப்ளேட்டில் உணவு பறிமாற வைக்கப்பட்டிருந்த நெகிழி பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி விதிமுறைகள் பின்பற்றாத இரண்டு பேக்கரி மற்றும் இரண்டு உணவகங்கள், ஒர் துரித உணவகம்(பாஸ்ட் புட்)என ஐந்து கடைகளுக்கு ரூபாய்.2000 வீதம் இரண்டு கடைகளுக்கும் ரூபாய்.ஆயிரம்(1000) வீதம் மூன்று கடைகளுக்கு என ஒரே நாளில் ஐந்து கடைகளுக்கு 7 ஆயிரம் உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமல் மீதமாகும் சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள வழிவகை குறித்து விழிப்புணர்வு செய்தும்,
நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள் குறித்த ஸ்டிக்கர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு புகார் தெரிவிக்க வேண்டிய புகார் எண் 9444042322 குறித்தும் செயற்கை நிறைமேற்றிகள் எங்கள் உணவகங்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒர் பேக்கரி மற்றும் துரித உணவகத்தில் பயன்படுத்திய முறையே பாதாம் பவுடர் மற்றும் உரிய விபரங்கள் இல்லாத சில்லி சிக்கன் மசாலா பவுடர் பகுப்பாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வறிக்கை அடிப்படையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், கடை உரிமையாளர் மீதும் நியமன அலுவலர் வழிகாட்டல்படி எடுக்கப்படும் என ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார். உரிய விதிமுறைகள் பின்பற்றாத உரிய லேபிள் விபரங்கள் இடம் பெறாத எந்த உணவு பொருட்களும் வாங்குவதோ, விற்பனை செய்வதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிக்கை செய்தார்.
