
பென்னாகரம்,
ஒகேனக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிப்பு நீரை செடிகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் ஆரண்யா பூங்கா பகுதியில் 60 செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தங்கும் விடுதிகள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, பாதாள சாக்கடை அமைத்து கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் மூலமாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது .இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிப்பு நீரை செடிகளுக்கு மற்றும் அருகில் உள்ள மரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக செடிகள் நடும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆரண்ய பூங்கா பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சுமார் 120க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் செடிகளுக்கு விடப்படும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒகேனக்கல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பொறியாளர் நவீன் பென்னாகரம் ஒன்றிய பொறியாளர் தமிழரசு பென்னாகரம் ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேணுகோபால் ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்
