
கோவை சத்திசாலை காந்திபுரத்தில் உள்ள ஓலா பிரத்யோக விற்பனை மையத்தில் எஸ் ஒன் ப்ரோ4680 பாரத் செல் பேட்டரி வசதியுடன் கூடிய ஓலா ஸ்கூட்டர் அறிமுகம் மற்றும் விற்பனை தொடங்கியது
ஓலா ஏரியா மேனேஜர் ஸ்ரீராம், கோவை ஷோரூம் மேனேஜர் சந்தோஷ் ஆகியோர் புதிய ஓலா ஸ்கூட்டர் நவீன தொழில்நுட்பத்தில் உருவான பேட்டரியுடன் கூடிய சாவியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனை தொடக்கி வைத்தனர்.
பின்னர் புதிய ஸ்கூட்டர் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கோவை, கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஒலா நிறுவனம் இன்று தங்களது புதிய ஒலா எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையை தொடங்கியதாகவும் ஒலா நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் முதல் தயாரிப்பு என்றார். இது அதிக வரம்பு, அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதுடன், புதிய ஒலா
வாகனங்களில் ஒலா நிறுவனம் தனது சொந்த 4680 பாரத் செல் பேட்டரிகளை பயன்படுத்தி உள்ளதாக கூறினார். இவ்வகை மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்றார்.
எஸ் 1 ப்ரோ + க்கான தேவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்க திட்டமிட்டதை நிரூபித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது எங்கள் சொந்த 4680 பாரத் செல் மூலம் இயக்கப்படும் ஸ்கூட்டர்களை டெலிவரி பெற்றுள்ளனர் இந்தவகை பைக்குகள் ஒரு முறை சார்ஜ் செய்தால், 300 கிலோமீட்டர் பயணிக்கலாம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
