
கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில், வெளியேறும் கழிவுநீர், குறிச்சி வெங்கடாசலபதி நகரில் சென்று திருமறை நகர் வழியாக ராஜவாய்க்காலை அடைந்து ஆற்றில் கலக்கும். இத்தகைய வழிபாதை சிதம்பரம் என்பவரது வீட்டு வழியாக பல வருடங்களாக சென்று வந்தத் இது சம்பந்தமாக சிதம்பரம், மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் இவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியி கள் உடனடியாக சாக்கடை கால்வாயை ஏற்படுத்தி சாக்கடை நீரை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சாக்கடை நீர் தனி நபர் வீட்டு வழியாக செல்லாமல் கால்வாய் வழியாக வெளியேறும். இதனைத் தொடர்ந்து இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆன பாப்பாத்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. மாநகராட்சியின் இந்த செயல்பாடு தங்களுக்கு முழு திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதே போல் இந்த பகுதியில் சாலை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும், குறிச்சி பகுதிகளில் அளவுக்கு அதிகமான கடைகள், மற்றும் வீடுகள், அரசின் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், இதனால் சாலை மிகவும் குறுகலான அளவில் உள்ளது, இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன இவற்றை தடுக்க வேண்டும் என்றால் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
