
கோவை மாவட்ட எல்லை பகுதியான வாலையாறு வழியாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சோதனை சாவடி அமைக்க பட்டு தினசரி வருகின்ற வாகனங்கள் தனிக்கை செய்ய பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக இன்று காலை அந்த வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர் அப்பொழுது அந்த காரில் சுமார் 40 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்த பட்ட
விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு, வானியம்குளம் பகுதியை சேர்ந்த சுதீர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் நடத்த பட்ட விசாரணையில் கேரள மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியில் உள்ள ஷோபனா ஜிவல்லரி என்ற நகை கடையிலிருந்து பழைய தங்கத்தை கோவை பி. கே. வீதி பகுதிக்கு கொண்டுவந்து அதனை, விற்று பணமாக கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் கூறிவது உண்மையான தகவலா எனவும், இந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் வாகன சோதனையில் ரூபாய் 40 லட்சம் பறிமுதல் செய்ய பட்ட சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
