
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஓய்வுக்கால வாழ்க்கை முறையை சொகுசாக மாற்றி அமைக்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு பின்னணியில், தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் 160 சொகுசு குடியிருப்புகள் கொண்ட ஸ்ரீனிவாசா பாம்ஸ் என்ற இந்தியாவின் முதல் 3 இன் 1 முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 முதல் 15 வரை வீடு வாங்குவோருக்கு பதிவுக் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிக நம்பிக்கைக்குரிய முதியோர் குடியிருப்பு உருவாக்குனர்களில் ஒருவராகிய ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நாட்டின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டமான ‘ஸ்ரீனிவாசா பாம்ஸ் ஐ உருவாக்கியுள்ளது இதன் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர், ஃபேர்ஃபீல்ட் பை மேரியட் ஹோட்டலில் மார்ச் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்நிறுவனத்தின் கண்காட்சியில் வீடு வாங்குவோருக்கு, பத்திரப் பதிவு இலவசமாக செய்து தரப்படும். ஒரு குடியிருப்பின் விலை ₹ 37 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
பொள்ளாச்சி அருகில், மிக அமைதியான சூழலில், 1.18 ஏக்கர் பரப்பளவில் பசுமையான தென்னந்தோப்புகளுக்கு இடையே இக்குடியிருப்புத் திட்டம் அமைந்துள்ளது. கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எழில்மிகு காட்சிகளுடன் 160 குடியிருப்புகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான வடிவமைப்பு, உயர்தர வேலைப்பாடுகள் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த இல்லங்கள், சொகுசு வாழ்க்கைமுறை, முதியோர் பராமரிப்பு உதவி மற்றும் சமூகத்துடனான ஒன்றிய வாழ்க்கை ஆகிய மூன்றையும் ஒரே குடியிருப்புக் கட்டமைப்பில் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம் ஓய்வுக்கால வாழ்க்கையை புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும். முதியோர்கள் தங்களது பொற்காலத்தைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும், கண்ணியத்துடனும் கொண்டாடுவதற்கேற்ற ஒரு துடிப்பான சூழலை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் நிறுவனர் மோதிஷ் குமார், சென்னையை சேர்ந்த டாக்டர் மீனலோச்சினி, சுற்றுச்சூழல் ஆர்வலர் உமா பாஸ்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். முத்துக்குமாரசாமி மற்றும் வெங்கடேஸ்வரா தேங்காய் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் அறிவொளி ஆர். முத்துசாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
