
ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியில் கடந்த 4ஆம் தேதி பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்றது அப்போது அன்று இரவு நடன நிகழ்ச்சிக்கு போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில் ஊர் பொதுமக்களுக்கும் வெளியூர் ஆட்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதனை அறிந்த ஊர் நாட்டாமை சத்தியசீலன் சமாதானம் படுத்தினர் அப்போது இளங்கோ குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேர் ஊர் நாட்டாமை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் கட்டையால் தாக்கி உள்ளனர் இதனால் படுகாயம் அடைந்த சத்தியசீலனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்நிலையில் சத்தியசீலன் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலிசார் இளங்கோ, தசரதன், லட்சாதிபதி இருசன், ரீனா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் அதே போல் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் 15 க்கும் மேற்பட்டோர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் தகவலை அறிந்து ஊர் பொதுமக்கள் இன்று காலை காவேரிப்பட்டு ஊர் பொதுமக்கள் ஊர் நாட்டாமை தாக்கிய எதிரிகளை கைது செய்யக்கோரி ஜோலார்பேட்டை புத்துக்கோயில் செல்லும் சாலையில் காவேரிபட்டு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்கள் கோரிக்கை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அவ்வழியாக வந்த அரசு பஸ் உள்ளிட்ட பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் அவதிப்பட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
