தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோவை பந்தயசாலையில் கன்டன ஆர்ப்பாட்டம், 28ம் தேதி நாளை, மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை, பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சியை இக்கட்சியின் மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமை தாங்க உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3500 வரை, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும், தாட்கோ அலுவலகம் மூலம் எஸ்.சி மற்றும் எஸ்டி மக்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலதாமதம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றே முக்கால் கோடி தேவேந்திர குல வேளாளர் வேளாளர் சமூக மக்களை, எஸ்.சி பட்டியலில் இருந்து பிசி அல்லது எம்.பி.சி பட்டியில் சேர்க்கப்பட வேண்டும் எனவும், கோவை செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில், நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தகுதியானவர்களுக்கு உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசின் மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது ஆனால், இன்று வரை அதற்கான இடத்தை அளவீடு செய்து தரப்படவில்லை எனவும், கோவை நீதிமன்ற வளாகம் முன்பு சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவருக்கு முழு வெண்கல சிலை அமைத்து தரப்பட வேண்டும் என என்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் சமூக ஆர்வலர் நாகேந்திரன், இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன், செட்டி அசோக் பண்ணாடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.