
கோடை கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கோவையில் அதிகரித்து வருகின்ற நிலையில், கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இலவச நீர் போர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமை தாங்கி இலவச நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கினார். சுமார் ஆயிரகணக்கான பொதுமக்கள் நீர் மொரை பருகி சென்றனர். மேலும் இது குறித்து வழக்கறிஞர் புஸ்பாணந்தம் கூறியதாவது..
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொது மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இலவச நீர் மோர் வழங்கும் விழா வை ஏற்பாடு செய்து, கோவை சிவாஜி காலனி பகுதியில் ஞாயிறுக்கிழமை காலை 11 மணி முதல் மதயம் 1மணி வரை நீர் மோர் வழங்கினோம் இதில் சுமார் ஆயிரக்கணக்கானோர் நீர் மோர் வாங்கி அருந்தி சென்றதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் பெரிய குமாஸ்தா செல்வராஜ், ஜெபா, லட்சுமி, வைத்தியர் பாலகிருஷ்ணன், அமல்ராஜ், மோகன், வெங்கட், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுந்தர், பைனான்ஸியர் பெருமாள், சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்க தலைவர் லயன் டாக்டர் நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
