தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் 5,500 சதுர அடி பரப்பளவிலான ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஃபெதர்லைட் திறந்து வைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு மற்றும்
கல்வி ஃபர்னிச்சர்கள் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஃபெதர்லைட் தனது புதிய ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை மதுரையில் திறந்து வைத்துள்ளது இந்த தொடக்கம், தென்னிந்தியா முழுவதும் நவீன வேலை மற்றும் கல்வி சூழல்களை மாற்றியமைக்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தையும், அதன் தெளிவான உறுதிமொழியையும் வெளிப்படுத்துகிறது.

புதியதாக நிறுவப்பட்ட 5,500 சதுர அடி பரப்பளவுடைய இந்த ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஃபெதர்லைட் நிறுவனத்தின் முழுமையான தயாரிப்பு வரிசையை வெளிப்படுத்துகிறது. இதில் எர்கோனாமிக் இருக்கைகள், ஒத்துழைப்பு அலுவலக அமைப்புகள், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய வகுப்பறை ஃபர்னிச்சர்கள், ஆய்வக மேஜைகள், நூலக அமைப்புகள், அரங்க இருக்கைகள், மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பல்வேறு தீர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வசதியின் முழுமையான அனுபவத்தை வழங்கும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கட்டிடக்கலைஞர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் கொள்முதல் நிபுணர்கள் ஆகியோருக்கு, மாறிவரும் வேலை மற்றும் கல்வி தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதுமையான, வடிவமைப்பு சார்ந்த ஃபர்னிச்சர் தீர்வுகளை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது இந்த மையத்தை, தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட்டின் இணை மேலாண்மை இயக்குநர் திரு பா. ரமேஷ் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
ஹாஷினி எண்டர்பிரைசஸ் இயக்குநர் திரு. S. பிரவீன் குமார், திருமதி சரண்யா, இயக்குநர், ஹாஷினி எண்டர்பிரைசஸ்

ஃபெதர்லைட் குழுமம் இணை இயக்குநர்,
திரு. திரு. கிரண் தீரன் செல்லாராம், ஃபெதர்லைட் குழுமம் வணிகத் தலைவர் – டீலர் மேலாண்மை,
திரு. நிரஞ்சன் டி. தேசாய், ஆகியோர்
கலந்துகொண்டனர்

இவ்விழாவில் உரையாற்றிய ஃபெதர்லைட் குழுமத்தின் இணை இயக்குநர் திரு. கிரண் தீரன் செல்லாராம் அவர்கள் கூறியதாவது:

மதுரையில் எங்கள் ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் -ஐ தொடங்குவதன் மூலம், இந்தப் பகுதியிலுள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுத்துறை அமைப்புகளுடன் எங்களது தொடர்பை மேலும் வலுப்படுத்துவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த மையம் புதுமையான, பயன்பாட்டு சார்ந்த மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான பணிமனை தீர்வுகளை வழங்கும் எங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. எங்கள் தயாரிப்பு வரிசைகளை நேரில் பார்வையிட்டு அனுபவிக்க வருகையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.”