திருப்பத்தூர் அருகே பெங்களூருக்கு கடத்த இருந்த 50 லட்சம் மதிப்பிலான 820 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் மூன்று கார் உட்பட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 kg அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து பெங்களூருக்கு கடத்த இருந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் 820 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக செம்மரக்கட்டைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த மூன்று கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வனச் சரக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேகர் என்பவரை கைது செய்தனர்.