
திருவண்ணாமலை செப்டம்பர் 26
திருவண்ணாமலையில்
சத்குரு அறக்கட்டளை நிறுவனர் நிர்மலானந்தா சுவாமிகள் தலைமையில் நேற்று கிரிவலப் பாதை அடி அண்ணாமலை அருகில் சடை சுவாமி ஆசிரமத்தில் காலை 9 மணி அளவில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.
இம்மு முகாமில் 300க்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கண் பரிசோதனை செய்யப்பட்டு
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சாதுக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
மேலும்
அறுவை சிகிச்சை தேவை எனில் முழுவதும் இலவசமாக சென்னைக்கு அழைத்துச் சென்று அனைவருக்கும் இலவச அறுவை சிகிச்சை செய்ய ப்படுவதாக
என்று அறக்கட்டளை சார்பாக தெரிவித்தனர்
