தைப்பூசத்தை முன்னிட்டு தாராபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்

தாராபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தைப்பூச திருநாளை முன்னிட்டு தாராபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு கட்டளை பூஜை உபயதாரர் சார்பாக அனைத்து விதமான அபிஷேகங்களும் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகை புரிந்த அனைத்து பக்த பொது மக்களுக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது இன்றைய தின அபிஷேக பூஜை கட்டளை உபயோதாரர் சென்னை தாம்பரத்தைச் சார்ந்த சாந்தி முத்துகிருஷ்ணன் தம்பதிகள் மற்றும் அபிராமி பாஸ்டின் பால் தம்பதிகள் அவர்கள் சார்பாக வழிபாட்டு பூஜைகள் முதல் கால பூஜை ஆக செய்யப்பட்டது இரண்டாம் கால பூஜை கோவிந்தாபுரத்தை சார்ந்த ரவிச்சந்திரன் அவர்கள் சார்பாக பூஜைகள் நடத்தப்பட்டது .
பௌர்ணமி திருநாளாம் தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை மனதில் நினைத்து வேண்டினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம் என்று கோவில் குருக்கள் மணி அவர்கள் தெரிவித்தார்