திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த அண்ணாமலை இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு நாட்றம்பள்ளி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் சறுக்கி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதன் காரணமாக தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்சியினர் 38 மாவட்டங்களில் ஒன்றிணைந்து காக்கும் உறவுகள் என்ற பெயரில் அண்ணாமலை குடும்பத்தாருக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான காசோலையை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா முன்னிலையில் ஒப்படைத்தனர்.
மேலும் அவர் நினைவாக தெனனை கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தனி பிரிவு போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 2017 பேட்சியினர் உடன் இருந்தனர்
