
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி
கிராமத்தை சேர்ந்த
இராமசுந்தரம் மகன் இளையராஜா தனது
அப்பா பெயரில் விவசாய நிலத்தை
தனிபட்டா வேண்டி இணைய தளம்
மூலமாக பதிவு செய்துவிட்டு,
நில அளவையர்
(சார்வேயர்) விஜயகுமாரை
நேரில் சந்தித்து
தனி பட்டா தேவைப்படுவதால்
நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு
கேட்டுள்ளார்,
ரூ.10,000/- கொடுத்தால்
மட்டுமே அளவீடு செய்யமுடியும்
என கூறியதால்
லஞ்சம் கொடுக்க விருப்பம்
இல்லாததால் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் எழுத்து மூலமாக புகார்
கொடுத்துள்ளார்.
புகாரை பெற்ற தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்
ஆய்வாளர் பெருமாள் வழக்கு பதிவு செய்த பிறகு ரசாயனம் தடவிய ரூ.10,000/- இளையராஜாவிடம்
கொடுத்து அனுப்பியுள்ளார்.
ரூ.10,000/- பணத்தை இளையராஜா
நில அளவையர் விஜயகுமாரிடம் லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த
காவல் ஆய்வாளர் G.பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர்
விஜயகுமாரை கையும், களவுமாக
பிடித்தும், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்து
ஆவணங்களை
