நீலகிரி, மாவட்டம், குன்னூர், அடுத்த உலிக்கல் பகுதியில் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..

இயேசு அழைக்கிறார் நிறுவனர் மற்றும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காருண்யா மருத்துவமனையும், நல்‌ உள்ளம் அறக்கட்டளை, காருண்யா பல்கலைக்கழக ஹெரிட்டேஜ் மாணவர் கிளப், ஐ.இ.இ.இ, ஏ.சி.எம் மாணவர்கள் இணைந்து, நீலகிரி, குன்னூர், அடுத்த உலிக்கல் பேரூராட்சி திருவள்ளுவர் நகர் சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை நடத்தினர். இம்முகாமில் இந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமை நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர் உலிக்கல் சண்முகம் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். காருண்யா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சாமுவேல் தாமஸ் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் நவீன் சுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார் . இம்முகாமில் உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், தலைவர் ராதா உறுப்பினர்கள், டாக்டர் சுந்தரராமன், காருண்யா ஜெபசிங், ஊர் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு காருண்யா மருத்துவமனை சார்பில் இரத்த அளவு, சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு, இ.சி.ஜி ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடைபெற்றது‌ மற்றும் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள், பல் மருத்துவமும் நடைபெற்றது.

மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இம்முகாமில் திருவள்ளுவர், பென்காம், கமாலின், பன்னவேனு, நெதிமந்து, கிராம மக்களும், திருவள்ளுவர் நகர் விளையாட்டு குழுவினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.