
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவர்
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட
3 செண்ட் இடத்தினை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் விஏஓ செல்வகுமாரை
(43 வயது)
சந்தித்து விவரம் கேட்டுள்ளார்.
அப்போது
D நமுனா பட்டாவில் உள்ள விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க
ரூ.5000/- லஞ்சமாக
கேட்டுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத
புகார்தாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
போலீசில்
புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின்படி
ரசாயனம் தடவிய ரூபாய் 5000 பணத்தை விஏஓ செல்வகுமாரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்,களவுமாக பிடித்து கைது செய்து தீவிர
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
