பழனி சண்முகநதியில் மஹாளய அமாவாசையை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் இடத்தில் சுகாதார சீர்கேடு.இதனை நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டி கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி ஆற்றங்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறப்படுகின்றனர்.
இதனால் பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் சுகாதாரமற்ற நிலையில் குப்பைகளும் கழிவுகளும் நீரில் கிடக்கின்றன. பொதுமக்கள் மன உளைச்சலுடன் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனை பழனி தேவஸ்தானம் அல்லது நகராட்சி அல்லது PWD நிர்வாகம் சேர்ந்து இந்த அவல நிலையை சரி செய்யப்பட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.