
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பாமக மாவட்ட செயலாளர் த.முருகன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் கிட்டு, தெற்கு மாவட்ட தலைவர் ராஜாராம் , வடக்கு மாவட்ட தலைவர் குருபாலமுருகன் முன்னிலையிலும் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்று வரும் சார்பதிவாளரை கண்டித்து மாபெரும்
முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் செல்லம்பட்டி சார்பதிவாளர் சுப்பையன் அரசு அங்கீகாரம் இல்லாத பத்திரங்களுக்கு லட்சகணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பத்திரம் பதிவு செய்து வருவதாகவும். நத்தம் வீட்டுமனை பதிவுகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும் அவருடைய உதவியாளர் ரகுபதி அவர்கள் ரூபாய் 5 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாகவும். உதவியாளர் ரகுபதி என்பவர் திருமங்கலத்தில் நடத்தி வரும் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் செல்லம்பட்டி அலுவலகத்தில் உள்ள கணினியை அவருடைய அலுவலகத்தில் அவரே பயன்படுத்தி பத்திர பதிவு செய்து வருகிறார். மேலும் இந்த இருவரும் சேர்ந்து அனைத்து வகையான பத்திரங்களுக்கும் பதிவு செய்ய வரும் பத்திர எழுத்தர் மற்றும் பொதுமக்களிடம் பேரம் பேசி நேரடியாகவும் இவர்கள் வேண்டிய நபர்கள் மூலமாகவும் லஞ்சம் பெற்று வருவதாகவும். மாணவர்களின் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் வாங்கி பதிவு செய்ய வரும் பொதுமக்களிடமும் லஞ்சம் வாங்கி பத்திரம் பதிவு செய்வது மட்டுமில்லாமல் பத்திர அலுவலகத்தை லஞ்ச அலுவலகமாக மாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் நீங்கள் என் மீது எந்த புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் அவர்களுக்கு ரூபாய் 12 லட்சம் லஞ்சம் கொடுத்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என சுப்பையன் கூறுவதாகவும் இந்த லஞ்சம் பெற்று உயிர்வாழும் இந்த இரண்டு பெருச்சாளிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யக்கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சார்பதிவாளரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதனை தொடர்ந்து காவல்துறையின் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது .மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்ந்து என பாமக சார்பில் எச்சரித்தனர்.
